தமிழ்நாடு செய்திகள்

சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து- விஜய்

Published On 2024-11-08 11:25 IST   |   Update On 2024-11-08 11:25:00 IST
  • சீமானுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
  • தவெக மாநாட்டிற்கு பிறகு சீமான், விஜய் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

இயக்குநரும் நடிகரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளாரன சீமான் இன்று தனது 58-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், சீமானுக்கு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தவெக மாநாட்டிற்கு பிறகு சீமான், விஜய் கட்சியின் கொள்கைள் குறித்து கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், விஜய் பிறந்தநாள் வாழ்த்து கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.



Tags:    

Similar News