தமிழ்நாடு செய்திகள்

மரியாதையின் அடையாளம் நாகூர் ஹனீபா- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

Published On 2025-12-24 20:39 IST   |   Update On 2025-12-24 20:39:00 IST
  • திமுகவின் கொள்கைகளை மேடைதோறும் கொண்டு சேர்த்தவர் நாகூர் ஹனீபா.
  • திமுக கொண்ட கொள்கைக்காக சிறைக்கு செல்லவும் தயங்காதவர் நாகூர் ஹனீபா.

சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் நாகூர் ஹனீபா நூற்றாண்டு விழா மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மரியாதையின் அடையாளம் நாகூர் ஹனீபா. உடலால் மறைந்தாலும் அவர் குரல் நம் உள்ளத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

கலைஞரும் நாகூர் ஹனீபாவும் நகமும் சதையும் போல் நட்புடன் பழகி வந்தனர்.

கல்லக்குடி கொண்ட கருணாநிதி பாடலை பட்டித்தொட்டி எல்லாம் கொண்டு சேர்த்தவர் நாகூர் ஹனீபா.

கட்சியின் மீது ஒருவரால் இறுதிவரை இத்தனை ஈடுபாட்டுடன் இருக்க முடியும் என்பதற்கு நாகூர் ஹனீபா ஒரு உதாரணம்.

திமுகவின் கொள்கைகளை மேடைதோறும் கொண்டு சேர்த்தவர் நாகூர் ஹனீபா.

தனது இறுதி மூச்சுவரை மக்கள் பாடகராக வாழ்ந்தவர் நாகூர் ஹனீபா, திமுகவின் வளர்ச்சிக்கு அவர் குரல் துணை நின்றது.

இதை கற்கவில்லை என்றாலும், ஆயிரக்கணக்கான மேடைகளில் கோடிக்கணக்கான மக்களை தன் வசப்படுத்தியவர் நாகூர் ஹனீபா.

திமுக கொண்ட கொள்கைக்காக சிறைக்கு செல்லவும் தயங்காதவர் நாகூர் ஹனீபா.

13 வயது சிறுவனாக இருக்கும்போதே ராஜாஜிக்கு எதிராக கருப்புக்கொடி காட்சி சிறை சென்றவர் நாகூர் ஹனீபா.

1957 தேர்தலில் நாகூர் ஹனீபா வெற்றி வாய்ப்பை இழந்தாலும் அதன் பின்னர் மேலவை உறுப்பினராக்கப்பட்டார்.

நாகூர் ஹனீபா போல் திமுகவை வளர்த்தெடுக்கும் நபர்கள் வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News