தமிழ்நாடு செய்திகள்

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வழக்கு - குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிப்பு

Published On 2025-12-24 17:53 IST   |   Update On 2025-12-24 17:53:00 IST
  • இந்த வழக்கில் ஒரே ஒரு சிசிடிவி காட்சி மட்டும் ஆதாரமாகக் கிடைத்தது.
  • ராஜு பிஸ்வகர்மாவை சூலூர்பேட்டை ரெயில் நிலையம் அருகே போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவை சேர்ந்த 8 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி பள்ளி முடிந்து மதியம் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது வடமாநில வாலிபர் சிறுமி வாயை பொத்தி தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ராஜு பிஸ்வகர்மாவை ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை ரெயில் நிலையம் அருகே போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட ராஜு பிஸ்வகர்மாவை குற்றவாளி என்று மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராஜு பிஸ்வகர்மாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 5 மாதங்களில் விசாரணை முடிக்கப்பட்டு, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது

Tags:    

Similar News