தமிழ்நாடு செய்திகள்

அதிமுகவிடம் 10 தொகுதிகளை கேட்டுள்ளோம்... சீட் தராவிட்டால் - ராம்தாஸ் அத்வாலே எச்சரிக்கை

Published On 2026-02-15 12:43 IST   |   Update On 2026-02-15 12:43:00 IST
  • அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட 10 தொகுதிகளை கேட்டுள்ளோம்
  • சீட் தராவிட்டால் 51 தொகுதிகளில் எங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவோம்.

தமிழ்நாட்டில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது. இந்த கூட்டணியில் அமமுக, அன்புமணி தலைமையிலான பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட 10 தொகுதிகளை கேட்டுள்ளோம் என்று இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், "அதிமுக தலைமையிலான கூட்டணியில் எங்களுக்கு சீட் தராவிட்டால் 51 தொகுதிகளில் எங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவோம். போட்டியிடாத தொகுதிகளில் NDA கூட்டணிக்கு ஆதரவு அளிப்போம்" என்று கூறினார்.

Tags:    

Similar News