தமிழ்நாடு செய்திகள்
செங்கோட்டையனின் பதவி பறிப்பு சிறுபிள்ளைத்தனமான செயல்- சசிகலா
- செங்கோட்டையனின் நேர்மையான எண்ணத்தை அனைவரும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
- திமுகவை வலுவிழக்கச் செய்வதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.
அதிமுக மூத்த முன்னோடியும் முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான செங்கோட்டையன் மீதான நடவடிக்கை அறிவார்ந்த செயலாகாது என சசிகலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சசிகலா மேலும் கூறியதாவது:-
செங்கோட்டையனின் பதவி பறிப்பு சிறுபிள்ளைத்தனமான செயல், இது அதிமுக கட்சி நலனுக்கு உகந்தது அல்ல.
மீண்டும் அதிமுகு ஆட்சி அமைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் நேர்மையான எண்ணத்தை அனைவரும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோடிக்கணக்கான தொண்டர்களின் எண்ணங்களுக்கு நாம் என்ன பதில் தர போகிறோம்.
அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற சோமசுந்தரத்தை சமாதானப்படுத்தி கட்சிக்கு அழைத்துவர முயற்சித்தவர் ஜெயலலிதா.
திமுகவை வலுவிழக்கச் செய்வதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.