தமிழ்நாடு செய்திகள்
குடியாத்தத்தில் வீடு புகுந்து கடத்தப்பட்ட பள்ளி சிறுவன் பத்திரமாக மீட்பு
- வீடு புகுந்து பள்ளி சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இது தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் வீடு புகுந்து பள்ளி சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் பகுதியில் சிறுவனை போலீசார் மீட்டனர். கடத்திய கும்பல் சிறுவனை அங்கு விட்டு சென்றுள்ளனர்.
கடத்தப்பட்ட சிறுவன் தற்போது நலமுடன் உள்ளதாகவும் கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.