தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை குழு - விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
- தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை குழு தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாக வாய்ப்பு உள்ளது.
- இந்த மாத இறுதிக்குள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து பிரசாரத்தை தொடங்க கூட்டணி கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
தமிழகத்தில் அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். ஆட்சியை தக்க வைப்பதற்கு தி.மு.க. கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியும் தீவிரம் காட்டி வருகின்றன.
ஆளுங்கட்சியான தி.மு.க. கூட்டணி கட்சியினருடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை குழு தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாக வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு கட்சியினருடனும் இந்த குழு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் விரைவில் பேச்சு நடத்தப்பட வாய்ப்பு உள்ளது.
கூட்டணி தொகுதி பங்கீட்டை விரைவில் முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மாத இறுதிக்குள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து பிரசாரத்தை தொடங்க கூட்டணி கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
கூட்டணியில் இணைய தே.மு.தி.க. விருப்பம் தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.