தமிழ்நாடு செய்திகள்

விஜய் ஏன் பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை? - தவெக நிர்வாகி ராஜ் மோகன் பதில்

Published On 2026-02-02 10:41 IST   |   Update On 2026-02-02 10:41:00 IST
  • விஜயை பேட்டி எடுத்தவர்கள் அவர் இவ்வாறு கூறியதாக பேட்டி அளித்தனர்.
  • விஜயின் இந்த பேட்டி இணையத்தில் விமர்சிக்கப்பட்டது.

என்டிடிவி நடத்திய தமிழ்நாடு உச்சி மாநாட்டை ஒட்டி தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பேட்டி அளித்ததாக தெரிவிக்கப்பட்டது. விஜயை பேட்டி எடுத்தவர்கள் அவர் இவ்வாறு கூறியதாக பேட்டி அளித்தனர். இது தமிழ்நாட்டு அரசியலில் புதிய விஷயமாக பார்க்கப்பட்டது. விஜயின் இந்த பேட்டி இணையத்தில் விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில், விஜய் ஏன் பத்திரிகையாளர்களைச் சந்திப்பது இல்லை? என்று தவெக நிர்வாகி ராஜ் மோகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த ராஜ் மோகன், ""நான் விஜய்.. இவங்க விஜய்.. இவரு விஜய்.. இந்த அம்மா விஜய்.. நாங்க எல்லாரும் விஜய்.. எளிய வீட்டுப் பிள்ளைகள் பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் அரிய வாய்ப்பை கொடுத்திருக்கிறார். நாங்க எல்லாரும் உங்களைச் சந்திக்கிறோம். சரியான சந்தர்ப்பத்தில் அதுவும் நடக்கும்" என்று வித்தியாசமான பதிலை அளித்தார்.

Tags:    

Similar News