என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜ் மோகன்"

    • வேதனையில் இருந்து மீள முடியவில்லை.. முடியாது என்றே தோன்றுகிறது.
    • அவர்களின் வலியில் பங்கெடுத்துக் கொள்வதாலேயே இந்த அமைதி.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ராஜ் மோகன் கூறியிருப்பதாவது:-

    வேதனையில் இருந்து மீள முடியவில்லை.. முடியாது என்றே தோன்றுகிறது. அதே சமயம் உறவுகளை இழந்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, அவர்களின் வலியில் பங்கெடுத்துக் கொள்வதாலேயே இந்த அமைதி.

    இந்த அமைதியை பயன்படுத்தி என் மீது பரப்பப்படும் அரசியல் அவதூறுகளை, வதந்திகளை, வன்மங்களை, வெறுப்பை நம்ப வேண்டாம். அத்தனை கல்லடிகளையும் நான் தாங்க தான் வேண்டும்.

    நீதிக்கான முன்னெடுப்புகள் நெடியது. பாதிக்கப்பட்டவர்களோடு வாழ்நாள் முழுக்க பயணிப்பதும் அவர்களுக்கு நீதி பெற்றுதருவதுமே 41 உயிர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி. அதில் கவனம் செலுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இயக்குனர் ராஜ் மோகன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'பாபா பிளாக் ஷீப்'.
    • இப்படத்தை 2023-ம் ஆண்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

    ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரபல பேச்சாளர் ராஜ் மோகன் இயக்குனராக அறிமுகமாகும் படம் 'பாபா பிளாக் ஷீப்'. இப்படத்தில் ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், அயாஸ், நரேந்திர பிரசாத் மற்றும் பிளாக் ஷிப் குழுவினர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    பாபா பிளாக் ஷீப்

    இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்க சுதர்ஷன் ஶ்ரீனிவாசன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். பள்ளிக்காலத்தின் அழகான நினைவுகளையும் பள்ளி கால வாழ்க்கையை பிரதிபலிக்கும் திரைப்படமாக உருவாகவுள்ள 'பாபா பிளாக் ஷீப்' படத்தின் படப்படிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது.


    பாபா பிளாக் ஷீப் பட பூஜை

    மேலும் இப்படத்தை 2023-ம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.

    ×