தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க. 3-ம் ஆண்டு தொடக்க விழா - கொள்கை தலைவர்களுக்கு மரியாதை செலுத்திய விஜய்

Published On 2026-02-02 10:38 IST   |   Update On 2026-02-02 10:38:00 IST
  • தலைமை அலுவலகத்திற்கு வந்த த.வெ.க. தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
  • பெரியார், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் உள்ளிட்ட தலைவர்களுக்கு விஜய் மரியாதை செலுத்தினார்.

தமிழக வெற்றிக்கழகத்தின் 3-ம் ஆண்டு தொடக்க விழா இன்று பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

3-ம் ஆண்டு விழாவையொட்டி தலைமை அலுவலகத்திற்கு வந்த த.வெ.க. தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

த.வெ.க.. கொள்கை தலைவர்களின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து விஜய் மரியாதை செலுத்தினார். பெரியார், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் உள்ளிட்ட தலைவர்களுக்கு விஜய் மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. த.வெ.க. கொள்கை பாடல் ஒலிக்கப்பட்டது. இதையடுத்து த.வெ.க. கொடியை விஜய் ஏற்றி வைத்தார்.

Tags:    

Similar News