என் மலர்
நீங்கள் தேடியது "குடியாத்தம்"
- வீடு புகுந்து பள்ளி சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இது தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் வீடு புகுந்து பள்ளி சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் பகுதியில் சிறுவனை போலீசார் மீட்டனர். கடத்திய கும்பல் சிறுவனை அங்கு விட்டு சென்றுள்ளனர்.
கடத்தப்பட்ட சிறுவன் தற்போது நலமுடன் உள்ளதாகவும் கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
- அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
- அம்மனுக்கு சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடந்தன.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் இன்று நடந்தது.
காலை 5.30 மணியளவில் குடியாத்தம் தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோவிலில் இருந்து அம்மன் சிரசு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அப்போது, சிலம்பாட்டம், மயிலாட்டம், புலியாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன், பம்பை, உடுக்கை, மேள-தாளம் முழங்க அம்மன் சிரசு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
பழைய ஆஸ்பத்திரி ரோடு, காந்திரோடு, ஜவஹர்லால் தெரு வழியாக நடைபெற்ற ஊர்வலம் கெங்கையம்மன் கோவிலில் நிறைவடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். குறிப்பாக, தரணம்பேட்டை முதல்கோபாலபுரம் வரை சாலையின் இருபுறமும் பக்தர்கள் திரண்டிருந்தனர்.
வேலூர் மாவட்டம் மட்டுமின்றி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சிரசு ஊர்வலம் சென்ற பாதையில் கெங்கை யம்மனுக்கு பூமாலை சூட்டியும், கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு மக்கள் வெள்ளத்தில் நீந்திச்சென்ற சிரசு, கெங்கையம்மன் கோவில் மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த சண்டாளச்சி உடலில் பொருத்தப்பட்டது.
தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
மேலும் பக்தர்கள் தேங்காய்களை உடைத்தும், ஆடு, கோழி பலியிட்டும், பலர் அலகுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார ஆராத னைகள் நடந்தன. பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
மலர் மாலை, எலுமிச்சை மாலை, ரூபாய் நோட்டு மாலை ஆகியவற்றை பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து அம்மனுக்கு அணிவித்து வழிபட்டனர். வழி எங்கும் பக்தர்களுக்கு நீர், மோர், கூழ் இலவசமாக வழங்கினர்.
தொடர்ந்து இன்று இரவு அம்மன் உடலில் இருந்து சிரசு பிரிக்கப்பட்டு, கவு ண்டன்ய ஆற்றங்கரை யில் அலங்காரம் கலைக்கப்பட்டு மீண்டும் கோவிலுக்கு கொண்டு வரப்பட உள்ளது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் நொருங்கி போனது.
- ஆந்திரா மாநில கிராம மக்களின் போக்குவரத்து கடுமையாக பாதித்தது.
மேல்பட்டி:
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பரதராமி அருகே உள்ள ரங்கசமுத்திரம் கிராமம் தாசராபள்ளி கொல்லை மேடுவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 55), முன்னாள் ராணுவ வீரர்.
இவருக்கு திருமணம் ஆகி மனைவி தேன்மொழி, 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
வெங்கடேசன் தனது வீட்டின் அருகேயுள்ள, தனக்கு சொந்தமான 8 ஏக்கர் விவசாய நிலத்தில் பயிரிட்டு வருகிறார்.
இவர்களின் விவசாய நிலம் ஆந்திர மாநிலம் தண்டலாம்பள்ளி மற்றும் பாவதேசவூர் கிராமத்தை ஒட்டி உள்ளது.
அந்த கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்காக தமிழக எல்லையில் உள்ள பரதராமிக்கு, வெங்கடேசன் நிலத்தின் வழியாக சென்று வந்ததாக கூறப்படுகிறது.
இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்டலாம்பள்ளியை சேர்ந்தவர்கள், வெங்கடேசனின் நிலத்தின் வழியாக அத்துமீறி சாலை அமைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு வெங்கடேசன் எதிர்ப்பு தெரிவித்து, முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தார்.

இது சம்பந்தமாக வெங்கடேசன் மற்றும் எதிர் தரப்பினரை பரதராமி போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர்.
இதனை தொடர்ந்து வெங்கடேசன் தனது விவசாய நிலத்தை சுற்றி வேலி அமைத்தார். இதனால் ஆந்திரா மாநில கிராம மக்களின் போக்குவரத்து கடுமையாக பாதித்தது.
இதனால் ஆத்திரமடைந்த தண்டலாம்பள்ளி மற்றும் பாவதேசவூர் கிராமத்தை சேர்ந்த சிலர், வெங்கடேசன் வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதில் வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் நொருங்கி போனது.
இது குறித்து தகவல் அறிந்த பரதராமி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில் வெங்கடேசன் தனது குடும்பத்தினர் உயிருக்கு ஆபத்து இருப்பதால், பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
முன்னாள் ராணுவ வீரர் வீட்டை சூறையாடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- வேப்பூர் பகுதியை சேர்ந்த 4 பெண்கள் தங்கள் குலதெய்வ கோவிலான முனீஸ்வரன் கோவிலுக்கு சென்றுள்ளனர்
- கோவிலில் வழிபாடு செய்தபின் மாலை 5 மணியளவில் 4 பெண்களும் கோவில் அருகே உள்ள ஏரியில் குளித்துள்ளனர்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வேப்பூர் பகுதியில் பகுதியை சேர்ந்த 4 பெண்கள் உள்பட குடும்பத்தினர் வனப்பகுதியில் உள்ள தங்கள் குலதெய்வ கோவிலான முனீஸ்வரன் கோவிலுக்கு இன்று காலை சென்றுள்ளனர்.
கோவிலில் வழிபாடு செய்தபின் மாலை 5 மணியளவில் 4 பெண்களும் கோவில் அருகே உள்ள ஏரியில் குளித்துள்ளனர். அப்போது, ஏரியில் ஆழம் அதிகமாக இருந்த நிலையில் 4 பெண்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்
தற்போது அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






