என் மலர்
நீங்கள் தேடியது "பள்ளி சிறுவன்"
- வீடு புகுந்து பள்ளி சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இது தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் வீடு புகுந்து பள்ளி சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் பகுதியில் சிறுவனை போலீசார் மீட்டனர். கடத்திய கும்பல் சிறுவனை அங்கு விட்டு சென்றுள்ளனர்.
கடத்தப்பட்ட சிறுவன் தற்போது நலமுடன் உள்ளதாகவும் கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
- ஹான்ஸ் எனப்படும் போதை மருந்தை சிறுவனுக்கு வலுக்கட்டாயமாக கொடுத்துள்ளனர்.
- போலீசார் விசாரணை மேற்கொண்டதில் நாகல் குளத்தை சேர்ந்த 3 சிறுவர்கள் இந்த செயலை செய்தது தெரிய வந்துள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் பகுதியை சேர்ந்த பள்ளி சிறுவன் ஒருவனுக்கு, சில வாலிபர்கள் சேர்ந்து ஹான்ஸ் எனப்படும் போதை மருந்தை சிறுவனுக்கு வலுக்கட்டாயமாக கொடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்பொழுது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை வைத்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் நாகல் குளத்தை சேர்ந்த 3 சிறுவர்கள் சேர்ந்து, அந்த சிறுவனுக்கு போதை மருந்தை வழங்கியது தெரிய வந்துள்ளது. இது குறித்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






