தமிழ்நாடு செய்திகள்
SIR-க்கு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் த.வெ.க ஆர்ப்பாட்டம் நடத்த திட்டம்
- மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த தவெக திட்டமிட்டுள்ளதாக தகவல்.
- தவெக மாவட்ட செயலாளர்கள் போராட்டத்தை ஒருங்கிணைக்க அறிவுறுத்தி உள்ளதாக தகவல்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, SIR-ஐ கண்டித்து வரும் நவம்பர் 16ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த தவெக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தவெக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ஆர்ப்பாட்டத்தில் தவெக மாவட்ட செயலாளர்கள் போராட்டத்தை ஒருங்கிணைக்க அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.