தமிழ்நாடு செய்திகள்
த.வெ.க.வை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை - நயினார் நாகேந்திரன்
- தி.மு.க.வை சேர்ந்த சேகர்பாபு பா.ஜ.க.வை பற்றி பேச வேண்டியதில்லை.
- அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை.
புதுக்கோட்டையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை NDA-வில் இணைப்பது பற்றி காலம் தான் முடிவு செய்யும்.
* அமைச்சர் சேகர்பாபு சொல்வது உண்மைதான். பா.ஜ.க.வில் 3 ஆண்டுகள் தான் பதவி.
* 3 ஆண்டுகளுக்கு பின் ஒரு வேளை பதவி நீட்டிக்கப்படலாம்.
* தி.மு.க.வை சேர்ந்த சேகர்பாபு பா.ஜ.க.வை பற்றி பேச வேண்டியதில்லை.
* அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை.
* நடிகர் விஜயின் த.வெ.க.வை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை.
* த.வெ.க. இன்னும் ஒரு தேர்தலை கூட சந்திக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.