தமிழ்நாடு செய்திகள்

விஜய் வீட்டில் வாலிபர் நுழைந்தது எப்படி?- போலீசார் விசாரணை

Published On 2025-09-19 11:34 IST   |   Update On 2025-09-19 11:34:00 IST
  • கடந்த 4 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதும், வேளச்சேரியில் உள்ள சித்தி வீட்டில் வசிப்பதும் தெரியவந்தது.
  • விஜயை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் வாலிபர் வீட்டிற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.

சென்னையை அடுத்த நீலாங்கரையில் தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் வீடு உள்ளது. நேற்று மாலை இந்த வீட்டுக்குள் நுழைந்த வாலிபர், மொட்டை மாடிக்கு சென்று அமர்ந்து கொண்டிருந்தார். இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த வீட்டு காவலாளிகள், அந்த வாலிபரை பிடித்து நீலாங்கரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர், மதுராந்தகத்தை சேர்ந்த அருண் (வயது 24) என்பதும், கடந்த 4 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதும், வேளச்சேரியில் உள்ள சித்தி வீட்டில் வசிப்பதும் தெரியவந்தது. அவர் எப்படி விஜய் வீட்டுக்குள் நுழைந்து மொட்டை மாடிக்கு சென்றார்? என தெரியவில்லை. அவரை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் சேர்த்த போலீசாா், மேலும் இதுபற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், விஜயை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் வாலிபர் வீட்டிற்குள் நுழைந்ததாக தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து, விஜய் வீட்டில் வாலிபர் நுழைந்தது எப்படி? என காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

Similar News