தமிழ்நாடு செய்திகள்
கரூர் கூட்ட நெரிசல்: உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்திய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
- மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.
- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து கரூர் மாவட்டம் முழுவதும் சோகமான நிலையை நிலவுகிறது.
இந்த நிலையில், கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.
இதனை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு முன்னுரிமை அளித்து சிகிச்சை அளிக்கும்படி அறிவுறுத்தினார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.