தமிழ்நாடு செய்திகள்
விருதுநகரில் 3.0 ரிக்டர் அளவில் மிதமான நில அதிர்வு: சாலையில் மக்கள் தஞ்சம்
- விருதுநகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான நில அதிர்வு உணரப்பட்டது.
- இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3 ஆக பதிவானது.
விருதுநகர்:
விருதுநகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று இரவு 9 மணிக்கு மிதமான நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3 ஆக பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது
சில நொடிகள் நீடித்த இந்த நில அதிர்வினால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
திடீரென ஏற்பட்ட நில அதிர்வினால் விருதுநகரில் பரபரப்பு ஏற்பட்டது.