சிறந்த இயக்குனர்களாக மாரி செல்வராஜ், லோகேஷ் கனகராஜ், சுதா கொங்கரா அறிவிப்பு
- சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிப்ரவரி 13ம் தேதி அன்று விழா நடைபெறுகிறது.
- 2014-2022ம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
2016-2022ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், 2014-2022ம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிப்ரவரி 13ம் தேதி அன்று நடைபெறும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.
சிறந்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஒரு சவரன் தங்கப்பதக்கம், சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், 2016-2022ம் ஆண்டுகளுக்கான சிறந்த இயக்குநர்களுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சிறந்த இயக்குநர்கள் விருது 2016-லோகேஷ் கனகராஜ், 2017-புஷ்கர் காயத்ரி, 2018- மாரி செல்வராஜ், 2019- பார்த்திபன், 2020- சுதா கொங்கரா, 2021- தா.செ.ஞானவேல், 2022-கவுதம் ராமச்சந்திரன் ஆகியோருக்கு சிறந்த இயக்குனர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களை உயர்வாக சித்திரிக்கும் படங்களாக அருவி, தர்மதுரை, கனா, பொன் மகள் வந்தாள் படங்களுக்கு சிறப்பு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களை உயர்வாக சித்தரிக்கும் படங்களாக கமலி ஃபிரம் நடுக்காவேரி, நெற்றிக்கண், அவள் அப்படித்தான்-2க்கு சிறப்பு பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த படங்களுக்கு முதல் பரிசு ரூ.2 லட்சம், 2வது பரிசு ரூ.1 லட்சம், 3வது பரிசு ரூ.75,000, சிறப்பு பரிசு- ரூ.75,000 அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களை உயர்வாகச் சித்தரிக்கும் படத்திற்கு சிறப்பு பரிசாக ரூ.1.25 லட்சம் வழங்கப்படும்.