தமிழ்நாடு செய்திகள்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்- தமிழக அரசிடம் அறிக்கை கேட்ட கவர்னர்
- புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
கரூரில் நேற்று இரவு கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தது தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழக அரசிடம் கவர்னர் ஆர்.என்.ரவி விரிவான அறிக்கை கேட்டுள்ளார்.