தமிழ்நாடு செய்திகள்
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: விசாரணையை தொடங்கினார் நீதியரசர் அருணா ஜெகதீசன்
- மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டதை நடத்தினார்.
- ஓய்வுபெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விவகாரம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் நேற்று இரவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டதை நடத்தினார்.
அப்போது, கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் 40 பேர் பலியானது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் விசாரணையை தொடங்கினார்.
அதன்படி, சம்பவம் நடைபெற்ற கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தி வருகிறார்.