தமிழ்நாடு செய்திகள்

UGC புதிய விதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

Published On 2026-01-29 08:34 IST   |   Update On 2026-01-29 08:34:00 IST
  • UGC கொண்டு வந்துள்ள புதிய விதிகள் தாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்கது.
  • மாணவர்களை குறிவைத்து மீண்டும் மீண்டும் தாக்குதல்கள் நடந்துள்ளன.

சென்னை:

சாதி பாகுபாட்டை களைய பல்கலைக்கழக மானியக்குழு கொண்டு வந்துள்ள புதிய விதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,

சாதிய பாகுபாடுகளை களையும் வகையில் UGC கொண்டு வந்துள்ள புதிய விதிகள் தாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்கது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர் உயர்கல்வி நிறுவனங்களில் குறிப்பாக SC, ST மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வருகின்றன. தென்னிந்தியா, காஷ்மீர் மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களை குறிவைத்து மீண்டும் மீண்டும் தாக்குதல்கள் மற்றும் சித்ரவதைகள் நடந்துள்ளன. இந்த சூழலில், சமத்துவ பாதுகாப்புகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்று.

மாணவர் இறப்புகளைத் தடுப்பது, பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களிடையே இடைநிற்றல் விகிதங்களைக் குறைப்பதில் மத்திய பாஜக அரசு தீவிரமாக இருந்தால், இந்த விதிமுறைகள் வலுப்படுத்தப்படுவது மட்டுமல்லாமல், அவற்றின் கட்டமைப்பு இடைவெளிகளை நிவர்த்தி செய்யும் வகையில் திருத்தப்பட்டு, உண்மையான பொறுப்புணர்வுடன் செயல்படுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். 

Tags:    

Similar News