தமிழ்நாடு செய்திகள்

ஜெயலலிதா பிறந்த நாள்: டி.டி.வி.தினகரன் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார்

Published On 2025-02-17 11:44 IST   |   Update On 2025-02-17 11:44:00 IST
  • அரண்மனை அருகில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
  • 24-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

சென்னை:

அ.ம.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி வருகிற 24-ந்தேதி மாலை 4 மணியளவில் ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை அருகில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு ஏழை, எளியோருக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.

இதனையொட்டி அ.ம.மு.க. மாவட்டங்கள் வாரியாக வருகிற 24-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

இந்த பொதுக்கூட்டங்களுக்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட செயலாளர்களுடன், தலைமைக் கழக நிர்வாகிகள், மாநில, மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகம் சார்பு அணிகளின் நிர்வாகிகளும் ஒன்றிணைந்து செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News