தமிழ்நாடு செய்திகள்

பெண்கள் விரும்பும் தலைவியாக திகழ்ந்தவர் ஜெயலலிதா - தமிழிசை

Published On 2025-02-24 12:20 IST   |   Update On 2025-02-24 12:20:00 IST
  • ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தமிழிசை பகிர்ந்துள்ளார்.
  • இரும்பு பெண்ணாக நின்று கடுமையான அரசியல் சூழ்நிலைகளை துரும்பு என சமாளித்தவர் ஜெயலலிதா

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 ஆவது பிறந்தநாளை அதிமுகவினர் இன்று வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மூத்த பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவரது பதிவில், "இரும்பு பெண்ணாக நின்று.. கடுமையான அரசியல் சூழ்நிலைகளை.. துரும்பு என்று சமாளித்து... கடுமையாகத் தெரிந்தாலும்.. மனதில் கரும்பு என்று... நிரூபித்து... கட்சி எல்லை கடந்து.. பெண்கள் விரும்பும் தலைவியாக.. வலம் வந்த... மரியாதைக்குரிய.. முன்னாள் முதலமைச்சர் அம்மா ஜெயலலிதா அவர்களை அவர் பிறந்த நாளில் நினைவு கூறுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News