தமிழ்நாடு செய்திகள்

நானும் தூய்மைப் பணியாளர்கள் பக்கமே நிற்கிறேன் - வைரமுத்து

Published On 2025-08-15 12:46 IST   |   Update On 2025-08-15 12:46:00 IST
  • தூய்மைப் பணியாளர்களுக்கு 6 புதிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது
  • முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள் பேரணி சென்றனர்.

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்ததற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச காலை உணவு, பணியின்போது மரணமடைந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் உள்ளிட்ட 6 புதிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது

இந்நிலையில், தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், " ஓர் உண்மையான சமூக மனிதன் தொழிலாளிகள் பக்கமே நிற்பான்; நானும் தூய்மைப் பணியாளர்கள் பக்கமே நிற்கிறேன்

சராசரி மனிதர்களால் சாத்தியப்படாத தூய்மைப் பணியை நுரையீரலைப் பணயம்வைத்து ஈடேற்றுகிற ஈடற்ற தியாகிகள் அவர்கள். அவர்கள் எதிர்பார்ப்பது கருணையை அல்ல; உரிமையை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அமைச்சரவை ஆறு அம்சத் திட்டத்தால் அவர்களின் வாழ்வுக்கு வளம்சேர்க்கவே கருதுகிறது.

தூய்மைப் பணியாளர்கள் விரைவில் வேலைக்குத்திரும்ப வேண்டும்;கோரிக்கைகள் காலப்போக்கில் கனிந்தே தீரும்

இது தொழிலாளிகள் உலகம் அவர்கள் நலம் சமுதாய நலம். அனைவர்க்கும் விடுதலைத் திருநாள் வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News