தமிழ்நாடு செய்திகள்

தேர்தல் முடிவு தெரிந்து விட்டதால் நிதியை ஒதுக்க பா.ஜ.க. மறுக்கிறது - மு.க.ஸ்டாலின்

Published On 2026-02-04 12:46 IST   |   Update On 2026-02-04 12:46:00 IST
  • வழக்கமாக சொல்லும் திருக்குறள் கூட மத்திய பட்ஜெட்டில் இல்லை.
  • தேவைப்படும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு கூட பட்ஜெட்டில் நிதி இல்லை.

விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.254.29 கோடி மதிப்பிலான 29 திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து இளைஞர்களின் கனவுகளை பதிவு செய்யும் 'என் கனவு என் எதிர்காலம்' திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். ரூ.390 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு என எதுவுமில்லை.

* வழக்கமாக சொல்லும் திருக்குறள் கூட மத்திய பட்ஜெட்டில் இல்லை.

* தமிழ்நாட்டின் மீதும், தமிழர்கள் மீதும் பா.ஜ.க.விற்கு அவ்வளவு வெறுப்பு

* தேவைப்படும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு கூட பட்ஜெட்டில் நிதி இல்லை.

* தேர்தல் முடிவு தெரிந்து விட்டதால் நிதியை ஒதுக்க பா.ஜ.க. மறுக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News