தமிழ்நாடு செய்திகள்

ஓடும் பஸ்சில் டிரைவருக்கு திடீர் நெஞ்சு வலி - சாமர்த்தியமாக பஸ்சை நிறுத்தியதால் உயிர் தப்பிய 36 பயணிகள்

Published On 2026-02-04 13:50 IST   |   Update On 2026-02-04 13:50:00 IST
  • பஸ்சை அந்தியூர் புதுப்பாளையம் பகுதி சேர்ந்த ராஜா என்பவர் ஓட்டினார்.
  • அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனடியாக தனியார் மருத்துவமனையில் ராஜாவை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையத்திலிருந்து இன்று காலை 9.10 மணியளவில் மேட்டூர் நோக்கி அரசு பஸ் கிளம்பியது. பஸ்சை அந்தியூர் புதுப்பாளையம் பகுதி சேர்ந்த ராஜா என்பவர் ஓட்டினார். சக்திவேல் நடத்துநராக இருந்தார். பஸ் 35 பயணிகளுடன் கிளம்பியது.

இந்நிலையில் அண்ணா மடுவு பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவர் ராஜாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக இதற்கு மேல் பஸ்சை இயக்க முடியாது என உணர்ந்த ராஜா பஸ்சை அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை அருகே நிறுத்தினார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி அதிகமானதால் அலறினார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனடியாக அந்த தனியார் மருத்துவமனையில் ராஜாவை சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நல்ல வேலையாக நெஞ்சு வலி ஏற்பட்டவுடன் ராஜா பஸ்சை சாமர்த்தியமாக ஓரமாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் பஸ்ஸில் இருந்த 35 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுகுறித்து அந்தியூர் பணிமனை மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து வேறு பஸ் வரவழைக்க பயணிகள் பத்திரமாக ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News