தமிழ்நாடு செய்திகள்

திமுக ஆட்சிக்கு எத்தனை மார்க்? பிரேமலதா பதில்..!

Published On 2025-08-05 16:30 IST   |   Update On 2025-08-05 16:30:00 IST
  • திமுக அரசுக்கு மதிப்பெண் வழங்க இது என்ன தேர்வா (Exam)?.
  • நிறையும், குறையும் சமமாக உள்ளது எனச் சொல்லிட்டேன்.

தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் இன்று உயிர்களுக்கு பாதுகாப்பு இல்லை. உடைமைகளுக்கு பாதுகாப்பு இல்லை. மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. வியாபாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லை. இதுபோன்ற நிலைமை தமிழகத்தில் இருக்கிறது.

இந்த ஆட்சியில் நிறையும், குறையும் உள்ளது. சாலையில் வாக்கிங் செல்ல முடிகிறதா? செயின் பறிக்கிறது... தினசரி என்ன நடக்கிறது என்பதை நாம் எல்லோரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்த நிலைமை மாற வேண்டும். சட்டம் ஒழுங்கை தன் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இதை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற திருட்டுகள், கொலைகள் நடக்காது.

ஆணவக் கொலைகள், லாக்அப் கொலைகள். விசாரணை என்று அழைத்துச் சென்று அடித்து கொல்கிறார்கள். இதெல்லாம் மனசுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. இதெல்லாம் மாற வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. சட்டம்- ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் இதை சரி செய்ய வேண்டும் என இந்த பத்திரிகையாளர்கள் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.

திமுக அரசுக்கு மதிப்பெண் வழங்க இது என்ன தேர்வா (Exam)?. நிறையும், குறையும் சமமாக உள்ளது எனச் சொல்லிட்டேன். 50-க்கு 50 வைத்துக் கொள்ளுங்கள்.

ஆணவக் கொலைக்கு அடிப்படையே ஜாதிதான். எத்தனை பெரியாரும், எத்தனை பாரதியாரும் வந்து சொன்னாலும் இங்கு ஜாதி வெறி இன்னும் மறையவில்லை. அந்த ஜாதி வன்மம்தான் கொலை வரைக்கு செல்கிறது. ஒட்டுமொத்த மக்களின் மனநிலை மாறினால்தான் இது மாறும்.

இவ்வாறு பிரேமலதாக கூறினார். 

Tags:    

Similar News