தமிழ்நாடு செய்திகள்

சென்னை ஐஐடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை - தேசிய மகளிர் ஆணையம் விசாரணை

Published On 2025-06-28 12:15 IST   |   Update On 2025-06-28 12:15:00 IST
  • மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவத்தில் பீகார் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
  • மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் பீகார் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இவ்வழக்கை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை செய்கிறது.

ஊடகங்களில் வந்த செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து விசாரிக்கும் தேசிய மகளிர் ஆணையம் சென்னை ஐஐடி மாணவி பாலியல் தொல்லை தொடர்பான வழக்கை நியாயமான முறையில் விசாரிக்க வேண்டும் என்று டிஜிபிக்கு கடிதம் எழுதி உள்ளது.

சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர் அமைப்பினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளியான ஞானசேகரன் கைது செய்யப்பட்டு அவருக்கு தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News