null
கள்ளக்குறிச்சியில் ஆற்றுத் திருவிழாவில் விபத்து: கேஸ் சிலிண்டர் வெடித்து பெண் உயிரிழப்பு!
- ராட்சத பலூனுக்கு காற்று ஏற்றும் சிலிண்டர் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே பெண் ஒருவர் உயிரிழந்தார்.
- உயிரிழந்தவர் குறித்த தகவல்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் ஆற்று திருவிழாவில் கேஸ் சிலிண்டர் வெடித்து கலா என்ற பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். ராட்சத பலூனுக்கு காற்று ஏற்றும் சிலிண்டர் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அப்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே நடைபெற்ற இந்த திருவிழாவில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்ட நிலையில் இந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மணலூர்பேட்டை போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். உயிரிழந்தவர்கள் குறித்த முழுதகவல் இன்னும் வெளியாகவில்லை.
முதலில் மூன்றுபேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானநிலையில், ஒருவர்தான் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். விபத்து தொடர்பாக பேட்டியளித்த அவர், சிலிண்டர் வெடிப்பு விபத்தில் கலா என்ற ஒருவர் உயிரிழந்துள்ளார்; இருவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 13 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.