தமிழ்நாடு செய்திகள்
தமிழகத்தில் 800 ஆண்டுகளுக்கு முன்பே விவசாய புரட்சி மேற்கொண்ட காலிங்கராயன் தியாகத்தை போற்றுகிறேன் - இ.பி.எஸ்.
- 90 கிலோமீட்டர் வரை செல்லும் காலிங்கராயன் கால்வாயை அமைத்து, வறண்ட பகுதிகளிலும் பாசன வசதி செய்து தந்தவர்.
- கடந்த 2018ஆம் ஆண்டு ஈரோட்டில் காலிங்கராயன் அவர்களின் மணிமண்டபத்தை நான் திறந்துவைத்ததையும் இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பாண்டிய மன்னன் சடையவர்மன் வீரபாண்டியனின் படைத் தளபதியாக இருந்தவரும், தனது விடா முயற்சியாலும் நம்பிக்கையாலும், கொண்ட கொள்கையில் இருந்து வழுவாது, 90 கிலோமீட்டர் வரை செல்லும் காலிங்கராயன் கால்வாயை அமைத்து, வறண்ட பகுதிகளிலும் பாசன வசதி செய்து தந்து, சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பே விவசாய புரட்சியை தமிழ்நாட்டில் மேற்கொண்டவருமான காலிங்கராயன் அவர்களின் நினைவாக கொண்டாடப்படும் தை 5ஆம் நாளான காலிங்கராயன் தினத்தில், அவர்தம் தியாகத்தையும் புகழையும் போற்றி வணங்குவதுடன்...
கடந்த 2018ஆம் ஆண்டு ஈரோட்டில் காலிங்கராயன் அவர்களின் மணிமண்டபத்தை நான் திறந்துவைத்ததையும் இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.