தமிழ்நாடு செய்திகள்

2026-ல் பெருவெற்றியைப் பெற்றிடப் பொதுக்குழு கூடிடும் மாமதுரை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2025-05-31 15:38 IST   |   Update On 2025-05-31 15:38:00 IST
  • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பிரமாண்ட கட்-அவுட்.
  • ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை.

தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று விமானம் மூலம் மதுரை வருகிறார். அவர் இன்றும், நாளையும் மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். ம

துரை உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த அரங்கின் முகப்பு தோற்றம் சென்னை அண்ணா அறிவாலயம் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.

அதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பிரமாண்ட கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

அவர் செல்லும் வழியில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறுகையில்,"#களம்2026-இல் பெருவெற்றியைப் பெற்றிடப் பொதுக்குழு கூடிடும் மாமதுரை" என்று குறிப்பிட்டிருந்தார். அத்துடன் வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Tags:    

Similar News