தமிழ்நாடு செய்திகள்

பொன்முடியின் பேச்சு குரூரத்தின் உச்சம்: அ.தி.மு.க. மகளிர் அணி ஆர்ப்பாட்டம்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Published On 2025-04-12 10:03 IST   |   Update On 2025-04-12 10:03:00 IST
  • நாளாந்தர பேச்சாளர்களுக்கு சற்றும் குறைவில்லாமல் அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார்.
  • தமிழ்நாட்டின் நாகரிகத்தை, அரசியல் பண்பாட்டை பொன்முடி அசிங்கப்படுத்தியுள்ளார்.

சென்னை:

அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு குரூர வக்கிரத்தின் உச்சம். நாளாந்தர பேச்சாளர்களுக்கு சற்றும் குறைவில்லாமல் அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார்.

தமிழ்நாட்டின் நாகரிகத்தை, அரசியல் பண்பாட்டை பொன்முடி அசிங்கப்படுத்தியுள்ளார்.

அமைச்சர் பொன்முடியை கண்டித்து அ.தி.மு.க. மகளிர் அணி சார்பில் வருகிற 16-ந்தேதி சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News