தமிழ்நாடு செய்திகள்

Drugs Mafia Kazhagam.. திமுகவை கடுமையாக விமர்சித்த பாஜக

Published On 2025-06-26 15:37 IST   |   Update On 2025-06-26 15:37:00 IST
  • போதைப்பொருள் வழக்கில் சிக்கிய திமுகவினர் குறித்த தகவலை ஒரு புகைப்படத்தின் மூலம் பாஜக பதிவிட்டுள்ளது.
  • தமிழகத்தில் போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டுமென்றால் உங்கள் திமுக கட்சியையே தடை செய்ய வேண்டும் போலவே? முக ஸ்டாலின் என பாஜக பதிவிட்டுள்ளது.

தமிழக பாஜக கட்சி எக்ஸ் தள பதிவில் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டுமென்றால் உங்கள் திமுக கட்சியையே தடை செய்ய வேண்டும் போலவே? முக ஸ்டாலின் என எக்ஸ்தள பதிவில் தமிழக பாஜக கட்சி தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் நடந்த போதைப்பொருள் வழக்கில் சிக்கிய திமுகவினர் குறித்த தகவலையும் ஒரு புகைப்படத்தின் மூலம் தெரிவித்துள்ளது.

அந்த பதிவில்,

ரூ.2,000 கோடி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: திமுக முன்னாள் நிர்வாகிக்கு அழைப்பாணை

நாகையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல்: திமுக பிரமுகர் உட்பட 6 பேர் கைது

புதுக்கோட்டையில் போதை பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக சொல்லப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில்

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக விவசாய அணி அமைப்பாளர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தென்காசியில் போதைப்பொருள் கடத்தல்..! திமுக நிர்வாகி கைதும்..! தலைமைக்கழக அறிவிப்பும் நடந்தது என்ன?

ரூ.70 கோடி மெத்தம்பெட்டமைன் வழக்கு; சர்வதேச அளவில் தொடர்பு?

திமுகவில் இருந்து நிரந்தர நீக்கம்! - methamphetamine drug case-

METHAMPHETAMINE DRUG CASE

chennai methamphetamine drug case: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ரூ.70 கோடி மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கடத்தலில் கைதான இப்ராஹில் திமுக மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணைத் தலைவராக இருந்தவர் என்பது தெரிய வந்துள்ளது என பேப்பர் செய்திகளை கோடிட்டு அந்த பதிவில் காட்டியுள்ளது.

Tags:    

Similar News