தமிழ்நாடு செய்திகள்
போராட்டம் எதிரொலி- ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை
- ஜனவரி 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் என அறிவிப்பு.
- 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
போராட்டம் அறிவித்துள்ள ஜாக்டோ ஜியோ, போட்டோ ஜியோ அமைப்பினருடன் நாளை அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
ஜனவரி 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் என அறிவித்ததன் எதிரொலியால் நாளை அரசு பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
அதன்படி, சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் எ.வ.லு அறையில் நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.