இஸ்லாமியர்களுக்கு எப்போதும் தி.மு.க. உறுதுணையாக இருக்கும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- பயணங்களால் ஏற்படும் அலைச்சலைவிட உங்கள் அன்பு மேலானது.
- நீங்கள் தரக்கூடிய அன்புதான், எனக்கு மகிழ்ச்சியை உற்சாகத்தை தருகிறது.
கும்பகோணம் அருகே தாராசுரம் பைபாஸ் மைதானத்தில் நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிக் லீக் மாநாட்டில் முதல்வர் உரையாற்றுகிறார்.
சிறுபான்மை உரிமையை காப்போம் எனும் தலைப்பில் நடைபெறும் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் பங்கேற்றதில் பெருமைப்படுகிறேன். பூரிப்படைகிறேன்.
தகைசால் தமிழர் காதர் மொய்தீன் எப்போது எந்த நிகழ்ச்சிக்கு அழைத்தாலும் மறுத்ததில்லை வந்துவிடுவேன்.
பயணங்களால் ஏற்படும் அலைச்சலைவிட உங்கள் அன்பு மேலானது.
நீங்கள் தரக்கூடிய அன்புதான், எனக்கு மகிழ்ச்சியை உற்சாகத்தை தருகிறது.
வழிநாட்டு தலங்கள் என்பது சமூக வளர்ச்சி, கல்வி ஆகியவற்றுடன் தொடர்புடையது என இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கின்றன.
உள்ளத்தால் உணர்வால் உடன்பிறப்புகள் நாம், இது இன்று ஏற்பட்ட நம்பு அல்ல காலம் காலமாக உள்ள நட்பு.
தமிழக தேர்தல் வரலாற்றை புரட்டிப்போட்ட 1967 தேர்தலில் அண்ணாவுக்கு உறுதுணையாக இருந்தவர் காயிதே மில்லத்.
திமுக முதல்முறை ஆட்சிக்கு வந்ததும் மிலாடி நபிக்கு அரசு விடுமுறை அறிவித்தவர் கலைஞர்.
காயிதே மில்லத் மணிமண்டபம் கட்ட இடம் ஒதுக்கியவர் கலைஞர் கருணாநிதி.
பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களுக்கு 3.5 உள்ஒதுக்கீடு அளித்தவர் கலைஞர்.
இஸ்லாமியர்களும் தானும் வேறு வேறு இல்லை என வாழ்ந்தவர் கலைஞர்.
இஸ்லாமியர்களுக்கு எப்போதும் திமுக உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.