தமிழ்நாடு செய்திகள்
null

விமர்சனம் எழுந்த நிலையில் பழங்குடியின திமுக MLA உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி நேரில் அஞ்சலி

Published On 2025-10-23 16:56 IST   |   Update On 2025-10-23 17:26:00 IST
  • கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பொன்னுசாமி.
  • மாரடைப்பு காரணமாக பொன்னுசாமி உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வான பொன்னுசாமி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 74.

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பொன்னுசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பொன்னுசாமி. முன்னதாக 2016-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்ட பொன்னுசாமி தோல்வியை தழுவினார்.

பொன்னுசாமி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சேந்தமங்கலம் தொகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்று - பழங்குடியின மக்களின் நலனுக்காக உழைத்த திரு. கு.பொன்னுசாமி MLA அவர்களது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொள்கை உணர்வோடு மக்களுக்குத் தொண்டாற்றிய அவர் என்றும் நம் நெஞ்சங்களில் வாழ்வார்!" என்று தெரிவித்துள்ளார்.

அதே சமயம் பொன்னுசாமியின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர், பொருளாளர் அல்லது மூத்த அமைச்சர்கள் கூட நேரில் அஞ்சலி செலுத்த செலுத்தாதது விமர்சனத்திற்கு உள்ளானது

பொன்னுசாமி பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர் என்பதால் தான் அவருக்கு திமுகவின் முக்கிய தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தவில்லை என்று இணையத்தில் விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில், பொன்னுசாமி உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 

Tags:    

Similar News