தமிழ்நாடு செய்திகள்
இந்திய ராணுவத்துக்கு தமிழ்நாடு துணை நிற்கும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
- நமது தேசத்திற்காக நமது ராணுவத்துடன் தமிழ்நாடு உறுதியாக நிற்கிறது என்று கூறியுள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தால் ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்திய ராணுவத்தால் நடத்தப்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்'-க்கு காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பயங்கரவாதத்திற்கு எதிராக இந்திய ராணுவத்துடன் தமிழ்நாடு துணை நிற்கும். நமது தேசத்திற்காக நமது ராணுவத்துடன் தமிழ்நாடு உறுதியாக நிற்கிறது என்று கூறியுள்ளார்.