தமிழ்நாடு செய்திகள்
நொந்து போய் நூடுல்ஸ் ஆன அ.தி.மு.க. தொண்டர்கள் தான் தியாகிகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
- சட்டசபை கூட்டத்தொடருக்கு யார் அந்த தியாகி? என்ற பேட்ஜ் அணிந்து அ.தி.மு.க.வினர் வருகை தந்தனர்.
சென்னை:
டாஸ்மாக் ஊழல் விவகாரம் குறித்து சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவருக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதன் பின் பேசிய முதலமைச்சர் மு.கஸ்டாலின், தாங்கள் சிக்கி உள்ள வழக்குகளில் இருந்து தப்பிக்க காலில் விழுந்தவர்கள் எதிர்க்கட்சியினர். முதல்வர் பதவிக்காக காலில் விழுந்தவர் எல்லாம் தியாகி யார் என பதாகை வைத்துள்ளனர். நொந்து போய் நூடுல்ஸ் ஆன அ.தி.மு.க. தொண்டர்கள் தான் தியாகிகள் என்றார்.
சட்டசபை கூட்டத்தொடருக்கு யார் அந்த தியாகி? என்ற பேட்ஜ் அணிந்து அ.தி.மு.க.வினர் வருகை தந்ததை விமர்சித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.