தமிழ்நாடு செய்திகள்
null

எச்.ராஜாவுக்கு பக்கவாதம்.. உடல் நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை

Published On 2026-01-31 20:01 IST   |   Update On 2026-01-31 20:03:00 IST
  • மேடையிலேயே அவர் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
  • கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் எச்.ராஜா அனுமதிக்கப்பட்டார்.

நேற்று சென்னையில் நடைபெற்ற தனியார் செய்தி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக தலைவர் எச்.ராஜாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேடையிலேயே அவர் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் பாலாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் எச்.ராஜா அனுமதிக்கப்பட்டார்.

அங்கு எச்.ராஜாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் இன்று எச்.ராஜா உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி எச்.ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 அறிக்கையில், பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவுக்கு பக்கவாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர் கண்காணிப்பில் உள்ள அவரது உடல்நலம் முன்னேறி வருகிறது. உறவினர்கள், நண்பர்களுடன் பேசக்கூடிய வகையில் நலமுடன் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News