வழிபாடு

இன்று தைப்பூசம்... முருகன் கோவில்களில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

Published On 2026-02-01 08:33 IST   |   Update On 2026-02-01 08:33:00 IST
  • பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, பால்குடம் எடுத்து வந்தனர்.
  • கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தை மாதம் பூச நட்சத்திரமும், பவுர்ணமி திதியும் கூடிய நாளில் முருகன் கோவில்களில் தைப்பூச விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சிவபெருமான், உமா தேவியுடன் சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பார்கள்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த தைப்பூச திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து முருகன் கோவில்களிலும் பக்தர்கள் குவிந்தனர்.

சென்னையில் உள்ள வடபழனி முருகன்கோவில், கந்தகோட்டம், குன்றத்தூர், வளசரவாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட முருகன் கோவில்களில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

வடபழனி முருகன் கோவிலில் இன்று காலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, பால்குடம் எடுத்து வந்தனர். இதனால் வடபழனி முருகன்கோவில் வீதிகளில் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

இதேபோல் கந்த கோட்டம், குன்றத்தூர் கோவிலில் பக்தர்கள் குவிந்து இருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய கோவில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

சாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களின் பசியை போக்கும் வகையில், பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் சார்பில் ஆங்காங்கே இலவசமாக அன்னதானம் வழங்கப்பட்டது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News