தமிழ்நாடு செய்திகள்

பா.ஜ.க.வின் சுற்றுப்பயண பொறுப்பாளர்களாக எல்.முருகன், அண்ணாமலை நியமனம்

Published On 2026-01-30 07:46 IST   |   Update On 2026-01-30 07:50:00 IST
  • சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது.
  • 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு பா.ஜ.க.வின் சுற்றுப்பயண பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் கூட்டணி அமைப்பதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க, பா.ஜ.க. அ.ம.மு.க., தமிழ் மாநில காங்கிரஸ், த.ம.மு.க உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், பா.ஜ.க. சுற்றுப்பயண பொறுப்பாளராக எல்.முருகன், அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சிங்காநல்லூர், மதுரை தெற்கு, விருகம்பாக்கம், காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், பத்மநாபபுரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு பா.ஜ.க.வின் சுற்றுப்பயண பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பரங்குன்றம், ராதாபுரம், வால்பாறை, திருப்பூர் வடக்கு, உதகமண்டலம் ஆகிய தொகுதிகளுக்கு ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் சுற்றுப்பயணம் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

Similar News