தமிழ்நாடு செய்திகள்
சென்னை: ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சி - உ.பி.யை சேர்ந்த 3 பேர் கைது
- திருவான்மியூரில் ஏடிஎம் இயந்திரத்தில் நூதன கொள்ளை முயற்சியில் 3 பேர் ஈடுபட்டனர்.
- இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை திருவான்மியூரில் ஏடிஎம் இயந்திரத்தில் நூதன கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வெளியே வரும் இடத்தில் கருப்பு நிற அட்டையை வைத்து நூதன கொள்ளை முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட உ.பி.யை சேர்ந்த குல்தீப் சிங், சுமித் யாதவ், பிரிஜ் பான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.