தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் தொடங்கியது

Published On 2026-01-25 11:18 IST   |   Update On 2026-01-25 11:18:00 IST
  • த.வெ.க. நிர்வாகிகள் காலையிலேயே மாமல்லபுரம் ஓட்டலுக்கு வரத் தொடங்கினார்கள்.
  • மேடையில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்துக்கு தேர்தல் ஆணையம் கடந்த 22-ந்தேதி 'விசில் சின்னம்' ஒதுக்கியது. இதனால் த.வெ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

கரூர் வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணை, ஜனநாயகன் சென்சார் பிரச்சனை நீடித்து வரும் நிலையில் த.வெ.க. செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் செயல் வீரர்கள் கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டலில் நடைபெறுகிறது. செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக த.வெ.க. நிர்வாகிகள் இன்று காலையிலேயே மாமல்லபுரம் ஓட்டலுக்கு வரத் தொடங்கினார்கள்.

கூட்டத்தில் பங்கேற்பதற்காக த.வெ.க. தலைவர் விஜய் காலை 9.30 மணியளவில் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார்.

இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் செயல் வீரர்கள் கூட்டம் தொடங்கியது. மேடையில் விஜய் கொள்கை தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் த.வெ.க. கொள்கை பாடல் இசைக்கப்பட்டது. த.வெ.க. நிர்வாகிகள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இன்று மொழிப்போர் தியாகிகள் தினம் என்பதால், மேடையில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

Tags:    

Similar News