தமிழ்நாடு செய்திகள்
மொழிப்போர் வரலாற்றை உணர்த்தும் காணொளி வெளியீடு
- வீரவணக்கம், வீரவணக்கம்! மொழிப்போர்த் தியாகிகளுக்கு வீரவணக்கம்!
- மொழிப்போர் வீராங்கனை அன்னை தருமாம்பாளுக்கும் நினைவஞ்சலி செலுத்தினேன்.
மொழிப்போர் வரலாற்றை உணர்த்தும் காணொளி வெளியீடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
வீரவணக்கம், வீரவணக்கம்! மொழிப்போர்த் தியாகிகளுக்கு வீரவணக்கம்!
1938-ஆம் ஆண்டு மொழிப்போர்க் களத்தின் முதற்கட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த நடராசன் - தாளமுத்து ஆகியோருக்கு மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள அவர்களது நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தினேன். மொழிப்போர் வீராங்கனை அன்னை தருமாம்பாளுக்கும் நினைவஞ்சலி செலுத்தினேன்.
எழும்பூரில் அமைந்துள்ள தாளமுத்து நடராசன் மாளிகையில் திருவுருவச் சிலைகளையும் திறந்துவைத்தேன்.
மொழிப்போர்களில் உயிர்ப்பலியான மற்ற தியாகியரையும் இந்நாளில் தமிழுணர்ச்சியோடு நினைவுகூர்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.