தமிழ்நாடு செய்திகள்
தமிழ்நாட்டின் தனித்துவ இருமொழிக் கொள்கையை ஒருபோதும் கைவிட மாட்டோம்- ஆதவ் அர்ஜூனா
- நம் மொழிப்போர் தியாகிகளை நினைவு கூறும் 'மொழிப்போர் தியாகிகள் நாள்' இன்று.
- மொழி திணிப்பு எந்தவகையில் வந்தாலும் அதனை சமரசமின்றி எதிர்த்து போராடுவோம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதவது:-
இந்தி மொழி திணிப்பை எதிர்த்து, இறுதி மூச்சு வரை போராடி உயிர்நீத்த நம் மொழிப்போர் தியாகிகளை நினைவு கூறும் 'மொழிப்போர் தியாகிகள் நாள்' இன்று. தமிழ் மொழியின் சிறப்பையும் தமிழ்நாட்டின் தனித்துவ இருமொழிக் கொள்கையையும் ஒருபோதும் கைவிட மாட்டோம். மொழி திணிப்பு எந்தவகையில் வந்தாலும் அதனை சமரசமின்றி எதிர்த்து போராடுவோம் என்று இந்நாளில் உறுதியேற்போம்.
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்! வீரவணக்கம்!!
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.