தமிழ்நாடு செய்திகள்

மாணவியின் பாதுகாப்பை உறுதி செய்யாத அவல ஆட்சிதான் திராவிட 'Disaster Model' - அண்ணாமலை

Published On 2024-12-30 11:46 IST   |   Update On 2024-12-30 11:46:00 IST
  • ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூக புரட்சி என்று நிகழ்ச்சி ஒன்றில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
  • மேடையில் எப்படி இப்படி பேசுகிறீர்கள் முதல்வர் அவர்களே?

சென்னை:

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூக புரட்சி என்று நிகழ்ச்சி ஒன்றில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

கல்லூரிக்குள் நுழைந்து அங்கு பயிலும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவனை உங்கள் கட்சியில் இருந்து இன்று வரை நீக்காமல் ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் போது, மேடையில் எப்படி இப்படி பேசுகிறீர்கள் முதல்வர் அவர்களே?

ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூக புரட்சி, அந்த பெண்ணுக்குக் கொடுக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்பை கூட உறுதி செய்ய முடியாத ஒரு அவல ஆட்சி தான் இந்த திராவிட Disaster Model என்று விமர்சித்துள்ளார். 

Tags:    

Similar News