தமிழ்நாடு செய்திகள்
கூடா நட்பு கேடாய் முடியும்: பா.ஜ.க. கூட்டணி குறித்து தி.மு.க.- அ.தி.மு.க.வினர் சட்டசபையில் வாக்குவாதம்
- கூடா நட்பு கேடாய் முடியும் என அ.தி.மு.க.வினரை பார்த்து துணை சபாநாயகர் பிச்சாண்டி கூறினார்.
- 1999-ல் பா.ஜ.க.வுடன் நீங்கள் கூட்டணி வைத்திருந்த போது கூடா நட்பு எப்படி இருந்தது? என எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பினார்.
சென்னை:
அ.தி.மு.க.- பா.ஜ.க.வுடனான கூட்டணி குறித்து தமிழக சட்டசபையில் ஏற்கனவே விவாதங்கள் நடைபெற்று உள்ளன. இந்த நிலையில் இன்றும், தேர்தல் கூட்டணி தொடர்பாக சட்டசபையில் தி.மு.க.- அ.தி.மு.க.வினர் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கூடா நட்பு கேடாய் முடியும் என அ.தி.மு.க.வினரை பார்த்து துணை சபாநாயகர் பிச்சாண்டி கூறினார்.
இதற்கு, கூடா நட்பு கேடாய் முடியும் என்பது உங்கள் தலைவர் (கலைஞர்) சொன்னதுதான் என எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
1999-ல் பா.ஜ.க.வுடன் நீங்கள் கூட்டணி வைத்திருந்த போது கூடா நட்பு எப்படி இருந்தது? என எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பினார்.