தமிழ்நாடு செய்திகள்
இஸ்லாமியர்களுக்கு முதலமைச்சர் வெளியிட்ட 5 முக்கிய அறிவிப்புகள்
- உலமாக்களுக்கான குடும்ப ஓய்வூதியம் ரூ.2,500-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
- கோவையில் புதிய வக்ஃபு தீர்ப்பாயம் அமைக்கப்படும்.
கும்பகோணம் அருகே தாராசுரம் பைபாஸ் மைதானத்தில் நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிக் லீக் மாநாட்டில் முதல்வர் உரையாற்றுகிறார்.
சிறுபான்மை உரிமையை காப்போம் எனும் தலைப்பில் நடைபெறும் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதன்படி,
தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் பதிவு பெற்றுள்ள உலமாக்களுக்கான ஓய்வூதியம் ரூ.5,000-ஆக உயர்வு.
உலமாக்களுக்கான குடும்ப ஓய்வூதியம் ரூ.2,500-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
கோவையில் புதிய வக்ஃபு தீர்ப்பாயம் அமைக்கப்படும்.
இஸ்லாமியர்களுக்கான அடக்கஸ்தலம் அமைக்க மாநகராட்சி பகுதிகளில் இடங்கள் அடையாளம் காணப்படும்.
இஸ்லாமிய மக்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.