தமிழ்நாடு செய்திகள்

என்ன முடிவு வந்தாலும் அதை ஏற்றுக் கொள்கிறேன்... தமிழிசை சவுந்தரராஜன்

Published On 2024-06-04 10:17 IST   |   Update On 2024-06-04 10:17:00 IST
  • பிரசாரம் செய்ய எனக்கு மிகக்குறுகிய நேரமே இருந்தது.
  • நான் என்றென்றும் மக்களுக்கு சேவை செய்வேன்.

சென்னை:

தென்சென்னை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை வகிக்கிறார்.

இந்த நிலையில், தேர்தல் முடிவு குறித்து தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில்,

அனைத்து அரசியல்வாதிகளும், அனைத்து தலைவர்களும் தங்களின் நம்பிக்கையை இந்நேரத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்த ஜனநாயக நடைமுறையை உலகம் முழுவதும் பாராட்டப்படுகிறது.

பிரசாரம் செய்ய எனக்கு மிகக்குறுகிய நேரமே இருந்தது. ஆனால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்ன முடிவு வந்தாலும் அதை ஏற்றுக்கொள்கிறேன். நான் நம்பிக்கையானவள், தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அது மக்களுக்கானது. நான் என்றென்றும் மக்களுக்கு சேவை செய்வேன்... என்றார்.


Tags:    

Similar News