தமிழ்நாடு

பாராளுமன்ற தேர்தல் களம்- விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்துகிறது தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.

Published On 2024-03-10 03:32 GMT   |   Update On 2024-03-10 04:16 GMT
  • தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு வழங்கலாம் என அறிவித்தது.
  • தொண்டர்களும், நிர்வாகிகளும் விருப்ப மனு பெற்று பூர்த்தி செய்து வழங்கினர்.

சென்னை:

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது.

அ.தி.மு.க.வில் தே.மு.தி.க., பா.ம.க. கட்சிகளை இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதனிடையே தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு வழங்கலாம் என அறிவித்தது. அதன்படி தொண்டர்களும், நிர்வாகிகளும் விருப்ப மனு பெற்று பூர்த்தி செய்து வழங்கினர்.

இந்நிலையில், விருப்பமனு அளித்தவர்களிடம் தி.மு.க., அ.தி.மு.க ஆகிய கட்சிகள் இன்று நேர்காணலை நடத்துகிறது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேர்காணலை நடத்துகிறார்.

அதே போல் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தோரிடம் இன்றும், நாளையும் நேர்காணல் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News